கம்பம் அருகே மனைவி மீதுள்ள சந்தேகத்தால் ஒருவர் குத்திக் கொலை

கம்பம் அருகே மனைவி மீதுள்ள சந்தேகத்தால் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-03-29 02:59 GMT

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி அலுவலக தெருவில் வசிப்பவர் மாரிச்செல்வம், 38. இவரது மனைவி செல்லமணி, 35. இவர்களுக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

செல்லமணி தனது பேச்சை கேட்காமல் அத்துமீறி நடந்து கொள்வதற்கு அவருடன் கேரளாவிற்கு வேலைக்கு செல்லும் மகுடபதி, 50 தான் காரணம் என சந்தேகம் அடைந்தார்.

இதனால் மாரிச்செல்வத்திற்கும், மகுடபதிக்கும் தகராறு நடந்துள்ளது. மாரிச்செல்வம் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகுடபதியை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே மகுடபதி இறந்தார். கம்பம் போலீசார் மாரிச் செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News