மேகமலையில் தொடர் மழை: சுருளி, சின்னசுருளியில் வெள்ளம்
மேகமலையில் பெய்து வரும் மழையால் சுருளி அருவி, சி்ன்னசுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.;
மேகமலையில் பெய்யும் மழையால் சுருளிஅருவியில் வெள்ளப்பெருக்க ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் மேகமலை புலிகள் காப்பகம் மட்டும் 1100 சதுர கி.மீ., பரப்பு கொண்டது. இங்கு தொடர்ந்து ஐந்தாவது நாளாக, நேற்றும் பலத்த மழை பெய்தது. இதனால் வைகையிலும் நீர்வரத்து தொடங்கி உள்ளது.
நேற்று பெய்த மழையால் சுருளி அருவி, சின்னசுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வெள்ளம் வடிந்த பின்னர் குளிக்கலாம். வெள்ளநீர் வந்து கொண்டிருக்கும் போது குளிக்க வேண்டாம் என வனத்துறை அறிவித்துள்ளது.