வியக்க வைக்கும் திருடர்களின் நெட் ஒர்க்: ஆச்சரியத்தில் தேனி போலீஸ்

தமிழகத்தில் வீடுபுகுந்து திருடும் கும்பலின் நெட்ஒர்க்கினை கண்ட தேனி போலீசார் கடும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.

Update: 2022-05-24 10:20 GMT

தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு என அடுத்தடுத்து தமிழகத்தின் பல நகரங்களில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வந்தன. தற்போதய நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப போலீஸ் நிர்வாகம் முழுமையாக மாறா விட்டாலும், தேவைக்கு ஏற்ப நவீனங்களை பயன்படுத்தி வருகிறது. இந்த திருட்டுக்கள் குறித்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் (இந்தக்கதையே ஒரு திகில் ஸ்டோரி போல் செல்கிறது) 4 பேரை கைது செய்து விட்டனர். மீதம் நான்கு பேரை தேடி வருகின்றனர். இவர்களை பிடித்து விசாரித்த போலீசார் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். காரணம் இந்த திருடர்கள் மொபைல் போன்களை பயன்படுத்தவில்லை.

சி.சி.டி.வி., கேமராக்கள் இல்லாத வீடுகளை தேடிப்பிடிக்கின்றனர். இருந்தால் முகமூடி அணிந்தும் திருடுகின்றனர். கேமராக்கள் இல்லாத வழியே தப்புகின்றனர். இவர்கள் தப்புவது, பின்னர் ஒன்று சேருவது, இக்குழுவில் பெண்களின் பங்களிப்பு, இக்குழுவின் ஒருமித்த செயல்பாடு, தலைமை திருடன் என அடுத்தடுத்து நீளும் பட்டியலையும், இவர்களின் நெட் ஒர்க்கையும் கண்ட போலீசார் தான் ஆச்சரியத்தில் உள்ளனர்.

இந்த திருடர்கள் சி.சி.டி.வி., கேமராக்களில் சிக்குவதில்லை. கைரேகை பதிவுகளை விட்டுச் செல்வதில்லை. மொபைல் போனையும் பயன்படுத்துவதில்லை. பின் எப்படிபோலீசார் பிடித்தனர் என கேட்காதீர்கள். இதனை சொல்லி விட்டால், அடுத்த முறை போலீசாருக்கு இந்த வியூகம் பயன்படாமல் போய் விடும். அவ்வளவு திகில் நிறைந்த திருப்பங்கள் இதில் உள்ளன.

ஆக தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு பகுதிகளில் திருடியது ஒரே கும்பல். இவர்களும் போலீசாரிடம் சிக்கி விட்டனர். இவர்களை பற்றிய விஷயத்தை மட்டுமே சொல்லலாம். இவர்கள் பூர்வீக தமிழர்கள். ஆனால் வசிப்பது ஆந்திராவில் உள்ள ஒரு தொலை துார கிராமத்தில் இவர்கள் மொபைல் போனை பயன்படுத்தாமல் நேரிடியாக மட்டுமே பேசிக்கொள்வார்கள். திட்டங்களை வகுப்பார்கள். திட்டமிட்டபடி பணிகளை முடித்த பின்னர் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று சேருவார்கள். பணத்தையும், நகையையும்  பங்கீடு செய்ததும், ஊருக்கு திரும்பி விடுவார்கள். திருடிய பொருட்களை பொதுக்கட்ட வேண்டிய நிலை உள்ளது. எனவே தான் திருடும் போது, ஒரே வீட்டில் 50 பவுன், 60 பவுன் என கிடைத்து விட்டால் ஒரே வீட்டோடு திருட்டை முடித்துக் கொள்வார்கள். அப்படி ஒரே வீட்டில் அதிகம் கிடைக்காவிட்டால், அடுத்தடுத்து பல வீடுகளில் திருடுவார்கள்.

திருடும் நாள் அன்று மதியம் 2 மணிக்கே அந்த கிராமத்திற்கு வந்து விடுவார்கள். மதியம் சாப்பிட்டு விட்டு துாக்கம் போடுவார்கள். மாலை 5 மணிக்கு திருட உள்ள வீடுகளின் பக்கம் நோட்டமிட்டு ஒத்திகை பார்ப்பார்கள். பின்னர் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது அருந்துவார்கள். இரவு 12 மணிக்கு குடிமகன்களின் ஆட்டமும் ஒடுங்கி விடும். இதன் பின்னர் மெல்ல நகர்ந்து சென்று சாவகாசமாக திருடிச் செல்கின்றனர். இவர்களுக்கு நோட்டமிடுவது முதல், திருடும் நாள் அன்று உளவு மற்றும் கண்காணிப்பில் ஈடுபடும் வரை ஆட்களை நியமித்துள்ளனர். இப்படி ஒரு வலுவான நெட்ஒர்க் இவர்களுக்குள் இருப்பதால், திருடும் போது மாட்டிக்கொள்வதில்லை.

போலீசாரின் தொழில்நுட்பமும் கூரிய அறிவும் தான் இப்போது இவர்களை விலங்கில் சிக்க வைத்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News