கம்பம் அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை
கம்பம் அருகே, புது மாப்பிள்ளை துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.;
தேனி மாவட்டம், கம்பம் டி.எஸ்.கே., நகரை சேர்ந்தவர் சிவமணிமாறன். இவருக்கும் சுருளிப்பட்டியை சேர்ந்த விக்னேஸ்வரிக்கும் எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் சிவமணிமாறன் தனது வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா விசாரணை நடத்தி வருகிறார்.