அமெரிக்க அதிபர் ஜோபிடன் சந்தித்த சோதனைகள்!
அமெரிக்க அதிபராக 82 வது வயதில் பதவியில் இருக்கும் சந்தித்த ஜோபிடன் சந்தித்த சோதனைகள் ஏராளம்.;
அமெரிக்க அதிபர் ஜோ பிடென் நவம்பர் 20, 2023 அன்று 82 வயதை அடைந்தார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு முழுவதும் உள்ளது. எனவே அவர் பதவி விலகும் போது, அவருக்கு வயது 83 நடந்து கொண்டிருக்கும். இந்த வயதிலும் உக்ரைன்- ரஷ்யா போர், இஸ்ரேல்- காஸா போர், ஈரான் நாட்டின் மாறுபட்ட சூழல், சிரியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் சூழல் என உலகில் நிகழும் பல பிரச்னைகளில் இருந்து தனது நாட்டையும், நட்பு நாடுகளையும் திறம்பட பாதுகாத்து, அமெரிக்க நிர்வாகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். அடுத்த அதிபர் தேர்தலில் களம் இறங்கி இருப்பது தான் மிகப்பெரிய சுவாரஸ்யம். இந்த முறை வெற்றி பெற்றால் தனது எண்பத்தி ஏழு வயது வரை அமெரிக்கா என்ற வல்லரசு நாட்டின் அதிபராக இருப்பார்.
தற்போதய அதிபர் ஜோபிடன் சந்தித்த சோதனைகள் மிக, மிக அதிகம். அதில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
ஜோபிடன் தனது மனைவி, மகளுடன் கிறிஸ்துமஸ் ட்ரீ வாங்கச் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அவரது மனைவியும் மகளும் இறந்தனர். இந்த சோகத்தில் இருந்து அவர் மீளும் முன்னர் ஒரு மகன் மூளை புற்றுநோயால் இறந்தார்.
அவரது மற்றொரு மகன் கோகோயின் போதைக்கு அடிமையானதால் அமெரிக்க கடற்படையில் இருந்து நீக்கப்பட்டார். ஜோ பிடனுக்கும் 1988ல் உயிருக்கு ஆபத்தான மூளை அனீரிஸம் இருந்தது, அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர் பிழைத்தார். இப்படி கடுமையான எதிர்மறையான வாழ்க்கைச் சூழ்நிலைகள் இருந்த போதிலும், மனம் தளராமல் வாழ்ந்து வந்த ஜோபிடன் தனது 78 வயதில் அமெரிக்க அதிபராகிறார்.
இந்த வயதிலும் அவர் இந்த பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தகுதியுடையவராக இருந்தார். நம்ம ஊரில் பெரும்பாலானோர் 60- 65 வயதிற்குள்ளானவர்கள், தனது வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். எனவே மூத்த குடிமக்களே இதை உங்கள் புதிய தொடக்கமாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள். நீங்கள் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள். கடினமாக உழைத்து இதுவரை உங்களால் சாதிக்க முடியாததை அடையுங்கள்.