இமயம் முதல் குமரி வரை கோயில்களில் தடம் பதித்த ஸ்தபதி...!

தேனியை சேர்ந்த ஜெயச்சந்திரன் ஸ்தபதி இமயம் முதல் குமரி வரை உள்ள பல ஆயிரம் கோயில்களுக்கு உலோக சிற்ப வேலைகளை செய்துள்ளார்

Update: 2023-02-07 00:00 GMT

தேனியில் உள்ள பஞ்ச உலோக  தொழிற்சாலை. வெள்ளை சட்டை அணிந்திருப்பவர் ஜெயச்சந்திரன் ஸ்தபதி. அடுத்து தாடியுடன் அமர்ந்திருப்பவர் அவரது மகன் ஸ்தபதி கோபி.

தேனியை சேர்ந்தவர் சிவசங்கரநாராயணன். இவர் கடந்த 1975ம் ஆண்டு தேனியில் ஸ்ரீ சிவசங்கரநாராயணா பஞ்ச உலோக சிற்பக்கூடத்தை நிறுவினார். இவரது மகன் ஜெயச்சந்திர ஸ்தபதியும் தனது 13வது வயதில் தன் தந்தையின் சிற்பக்கூடத்தில் பணிபுரிந்தார். இவரது மகன் கோபியும் தற்போது இதே சிற்பக்கூடத்தில் தான் பணிபுரிந்து வருகிறார். அதாவது மூன்று தலைமுறையாக சிற்பக்கூடத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கோபி பி.இ., மெக்கானிக்கல் என்ஜினியர். மும்பையில் சிறிது காலம் கார்ப்பரேட் கம்பெனிகளில் பணிபுரிந்த இவர், அந்த வேலையை விட்டு விட்டு தனது தந்தையுடன் சிற்பத்தொழிலுக்கு வந்து விட்டார்.

இவர்கள் கோபுர கலசம், அம்பாள் மற்றும் சுவாமிகளின் தங்கம், வெள்ளி, செம்பு, பஞ்சஉலோகம், பித்தளை கவசங்கள், கிரீடம், கொடிமர கவசம், கொடிமர நிர்மாணம், திருவாச்சி உள்ளிட்ட அத்தனை கவசங்களும் செய்து தருகின்றனர்.

இந்தியாவில் ரிஷிகேஷ் கோயிலிலும் இவர்களது கை வண்ணம் உள்ளது. இமயம் முதல் குமரி வரை பல ஆயிரம் இந்துக் கோயில்களில் இவர்களது கவச, உலோக சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூரிலும் உள்ள கோயில்களில் இவர் செய்த பஞ்ச உலோக சிற்பங்கள் உள்ளன.

இவர்கள் தெய்வ சிலைகளை வடிப்பதாலும், கவசங்களை வடிப்பதாலும் சுத்த சைவம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவரது சிற்பக்கூடத்தில் வேலை செய்பவர்கள், விடுமுறை நாட்களில் மட்டும்  அசைவம் சாப்பிடுவார்கள்.  அப்படி சாப்பிட  பின்னர்,  அந் ஒரு நாள் மட்டும் சிற்ப  வேலைக்கு வர மாட்டார்கள். பின்னர் குளித்து விட்டு சில சாஸ்திரங்களை கடை பிடித்த பின்னரே மீண்டும் சிற்ப வேலைகளை தொடங்குவார்கள்.

இது குறித்து ஸ்தபதி சிவசங்கரநாராயணன் கூறியது: கோயில் மூலஸ்தானம் வரை  நாங்கள் சென்று வேலை செய்ய வேண்டி உள்ளதால், ஆகம விதிகளை மீறி  எங்களது வாழ்க்கையை நடத்த மாட்டோம். எங்கள் வாழ்வியல் முறையே ஆகம விதிகளுக்கு உட்பட்டு தான் இருக்கும். இதனை இந்த காலகட்டத்தில் கடைபிடிப்பது சிரமம் என்றாலும், எங்களுக்கு இது பழகிப்போன விஷயம் நீங்களும் சிற்பங்கள், கவசங்கள் செய்யனுமா? 9952725168, 9976225186 என்ற  எண்களில்  தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

Tags:    

Similar News