பிரதமர் மோடி வருகையால் வளம் பெறும் ஸ்ரீரங்கம்
பிரதமர் மோடி வருகையால் ஸ்ரீரங்கத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.;
modi visit to trichy அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் வருகை தரும் பாரத பிரதமர் மோடி இறங்குவதற்காக ஸ்ரீரங்கம் யாத்திரிநிவாஸ் எதிரே உள்ள கோயில்தோப்பில் ஹெலிபேட் அமைக்கும் பணி தற்போது இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் வரும் பாரத பிரதமர் மோடி யாத்திரி நிவாஸ் எதிரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்து ஏற்பாடுகளை விரைவாக செய்து வருகின்றனர்.
எது எப்படியோ மோடியின் வருகையால் ஸ்ரீரங்கத்திற்கு விமோசனம் பிறந்துள்ளது. குண்டும் குழியுமான சாலைகள் வெகு வேகமாக சீரமைக்கப்பட்டு வருகின்றன. எரியாத விளக்குகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தேங்கி ஓடாமல் நிற்கும் சாக்கடைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. நகரில் முழுமையாக சுகாதாரமான குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நெரிசலான போக்குவரத்தை சீர்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஸ்ரீரங்கம் கோயில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது புத்தம் புதிது போல் சீரமைக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றி உள்ள ரோடுகளும் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் பிரதமர் வருகை ஸ்ரீரங்கம் மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் கிடைப்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. இதனையெல்லாம் விட சிறப்பு பிரதமர் வருகை, ஸ்ரீரங்கம் கோயிலின் பெருமையினை உலகறிய செய்துள்ளது. அதாவது ஸ்ரீராமரின் குலதெய்வம் ஸ்ரீரங்கநாதர் என்று உலகம் முழுவதும் இப்போது தான் தெரிந்துள்ளது.
ஸ்ரீரங்கத்திற்கு கிடைத்த அத்தனை பெருமைகளும் ராமேஷ்வரத்திற்கும் கிடைத்துள்ளன. இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்ற ராமேஷ்வரம் இப்போது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற கோயிலாக மாறி விட்டது. இனிமேல் உலக சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் ராமேஷ்வரம், ஸ்ரீரங்கம் வருவார்கள். இதன் மூலம் இந்துமதத்தின் பெருமை உலகறிந்த ஒரு விஷயமாக மாறி விட்டது என தமிழக மக்கள் பெரும் வரவேற்பு கொடுக்க தயாராகி விட்டனர்.