வீரபாண்டி திருவிழாவால் கீரை விற்பனை மந்தம்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா காரணமாக கீரை விற்பனை மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-09 04:30 GMT

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழா நாளை தொடங்குகிறது. ஒரு வாரம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்காக கடந்த 21 நாட்களுக்கு முன்னர் கம்பம் நடவு செய்யப்பட்டது. அப்போது முதல் (சிலர் சித்திரை முதல் தேதி முதல்) தேனி மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் விரதம் இருந்து வருகின்றனர்.

விரத காலங்களில் வேப்பங்காய் கசப்பு தவிர வேறு எந்த வகையிலும் கசப்பு பொருட்களை உணவுக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள். குறிப்பாக கீரை வகைகளை (சில மட்டுமே கசப்பு) தவிர்த்து விடுவார்கள். இதனால் ஒரு மாதமாக கீரை விற்பனை படு மந்தமாக உள்ளது.

தேனி உழவர்சந்தையில் ஒரு கீரை கட்டின் விலை 10 ரூபாய் தான். இதனால் எப்போதும் கீரைகள் தான் முதலில் விற்று தீரும். ஆனால் மக்கள் தவிர்க்க தொடங்கியது முதல் கீரை விற்பனை டல்லடித்து வருகிறது. வரும் மே 17ம் தேதி கவுமாரியம்மன் திருவிழா நிறைவடைகிறது. மே 18ல் ஊர்பொங்கல் நடைபெறும். அதன் பின்னரே மக்கள் கீரைகளை மீண்டும் பயன்படுத்துவார்கள் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News