தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் சர்க்கரை, சிறுநீரக நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-05-31 02:25 GMT

தேனி பழனிசெட்டிபட்டி கருப்பசாமி கோயில் மண்டபத்தில் நடந்த சிறப்பு சர்க்கரை, சிறுநீரக நோய் தடுப்பு முகாமினை பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தொடங்கி வைத்தார். 

தேனி கிட்னி மற்றும் சர்க்கரை நோய் தடுப்பு ஆலோசனை மையமும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நி்ர்வாகமும் இணைந்து கருப்பசாமி கோயில் மண்டபத்தில் சர்க்கரை, சிறுநீரக நோய் தடுப்பு ஆலோசனை முகாம் நடத்தினர்.

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் மணிமாறன், கவுன்சிலர் பாண்டீஸ்வரன் உட்பட பலர் முகாமில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

டாக்டர் மு.காமராஜன், எம்.டி., டி.எம்., (நெப்ராலஜி) தலைமையிலான குழுவினர் நோயாளிகளுக்கு பரிசோதனைகள் செய்து, நோய் தடுப்பு மற்றும் நோய் குணப்படுத்தும் ஆலோசனைகளை வழங்கினர். தொடர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

முகாமில் 102 பேர் பங்கேற்று பரிசோதனைகளை செய்து மருத்துவ ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள், மருந்துகளை பெற்றனர்.

Tags:    

Similar News