தேனியில் பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு: பீதியில் மக்கள்

தேனி நகர் பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று பாம்பு கடித்து பெண் உயிரிழந்தார்

Update: 2022-06-08 11:12 GMT

காட்சி படம் 

தேனி நகர் பகுதி வெகு வேகமாக விரிவடைந்து வருகிறது. நகரில் உள்ள தோட்டங்கள், வயல்வெளிகள் அத்தனையும் குடியிருப்புகளாக மாறி வருகின்றன.

இதனால் பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ போதிய இடமில்லாத நிலை உருவாகி விட்டது. அவற்றின் இருப்பிடத்தில் மக்கள் குடியேறுவதால், தேனியில் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் பாம்பு புகுவது சாதாரணமாகி விட்டது.

இந்நிலையில், தேனி மதுரை ரோட்டில் வசிக்கும் சாரதா,44 என்ற பெண் இரவு 8.30 மணிக்கு பணி முடித்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ரோட்டோரம் அவர் சென்ற போது, பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.

அலறிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதற்குள் அவர் இறந்து விட்டார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News