பூமிதான நிலங்களை மீட்டுத்தரக்கோரி பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை
பஞ்சமர் நிலங்களை மீட்டுத்தரக்கோரி பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பஞ்சமர், பூமிதான நிலங்களை மீட்டுத்தரக்கோரி பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சி.பி.ஐ(எம்.எல்) ஆண்டிபட்டி தாலுகா குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய அமைப்பு செயலாளர் கோபால் தலைமை வகித்தார்.
மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் அபுதாகீர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் இளையராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.