எஸ்.ஐ., தாக்கியதில் எலும்பு முறிவு: எஸ்.பி.,யிடம் இளம்பெண் புகார்
தனது கணவனை காரணம் இல்லாமல் போலீஸ் எஸ்.ஐ., தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தி விட்டார் என தேனி எஸ்.பி.,யிடம் இளம்பெண் புகாரளித்துள்ளார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் கைலாசபட்டியை சேர்ந்தவர் வைரமணி, 38. இவரது கணவர் கணேசன், 42, மதுபாட்டில் வாங்கிக் கொண்டு தேனியில் இருந்து பெரியகுளதிற்கு டூ வீலரில் சென்றுள்ளார்.
அல்லிநகரம் எஸ்.ஐ., முகமது யாஷிகா இவரது டூ வீலரை நிறுத்தி உள்ளார். டூ வீலரை சிறிது துாரம் தள்ளி சென்று ஓரமாக கணேசன் நிறுத்தி உள்ளார். இதனால் நிற்காமல் டூ வீலரை ஓட்டியதாக புகார் எழுப்பிய எஸ்.ஐ., முகமது யாஷிகா ஹெல்மெட்டால் கணேசனை கடுமையாக தாக்கி உள்ளார்.
இதில் கணேசனின் மார்பு எலும்பு முறிந்து நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. அவர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தனது கணவர் டூ வீலரை நிறுத்திய பின்பும் எஸ்.ஐ., கடுமையாக தாக்கியது ஏன்? என அவரது மனைவி வைரமணி, தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகாரளித்துள்ளார்.