தேனி தீயணைப்புத்துறையில் பணியாளர் பற்றாக்குறை
தேனியில் தீயணைப்புத்துறைக்கு 65 பணியிடங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் 15 பேர் மட்டுமே உள்ளனர்.
தேனி தீயணைப்பு நிலையம் 1975ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது 18 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. 45 ஆண்டுகளை கடந்த நிலையில் தேனி நகரின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துள்ளது. தொழில் வளர்த்தக வளர்ச்சியும், குடியிருப்புகளின் வளர்ச்சியும், போக்குவரத்து வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. வளர்ச்சியை விட பல மடங்கு பிரச்னைகளும் அதிகரித்துள்ளன. ஆனால் தீயணைப்புது்துறையில் 18 பணியிடங்களீல் ஒன்று குறைந்து விட்டது.
தவிர விடுமுறை அயல்பணி என தினமும் ஐந்து பேர் வரை சென்று விடுகின்றனர். மீதம் உள்ள 12 பேர் மட்டுமே தினமும் பணியில் ஈடுபடுகின்றனர். தவிர ஒரே ஒரு தீயணைப்புதுறை வாகனம் மட்டுமே உள்ளது. வாட்டர் டேங்கர் லாரி கூட இல்லை. தற்போது குறைந்தபட்சம் மூன்று தீயணைப்பு வாகனமாவது தேவைப்படுகிறது. அந்த அளவு பணிச்சுமையும், தே வையும் அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில் தீயணைப்பு நிலையத்திற்கு கட்டட வசதி கூட இல்லை. தற்போது தான் கட்டடம் கட்ட இடம் வழங்கப்பட்டு, கட்டுவதற்கு தேவையான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அரசு கூடுதல் பணியிடமும், மீட்பு உபகரணங்களும் வழங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேனி தீயணைப்புத்துறையில் பணியிட பற்றாக்குறை, மீட்பு உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்களுக்கு அவசர கால சேவை செய்வதில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. தேனி மாவட்ட கலெக்டர் இப்பிரச்னையில் தலையிட்டு தீயணைப்புத்துறைக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.