செட்டிபட்டியில் சிவசேனா ஆலோசனை கூட்டம்
தேனிமாவட்டம் பழனி அருகே செட்டிபட்டியில் சிவசேனா கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தேனி பழனிசெட்டிபட்டியில் சிவசேனா கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் முருகவேல் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் குருசஅய்யப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிரணி தலைவி கோகிலோ வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் கருப்பையா, மாவட்ட அமைப்பாளர் லதா உட்பட பலர் பங்கேற்றனர். சிவசேனா கட்சியில் புதிதாக மகளிர்கள் அதிகளவில் இணைந்தனர். கம்பம் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் ரவிக்குமாரை வெட்டிய கும்பலை கைது செய்ய வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.