தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு கூடையில் மனுக்களை சுமந்து வந்த சிவசேனா
Protest Petition -தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சிவசேனா கட்சியினர் கூடையில் மனுக்களை சுமந்து வந்தனர்.;
Protest Petition - சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு அய்யப்பன் தலைமையில் ஆட்சியரிடம் பல முறை பொதுமக்களின் குறைகளை மனுவாக அளிக்கப்பட்டது. எந்த மனு மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனை ஆட்சியர் அறிந்து கொள்ளும்படி மனுக்களை கூடையில் சுமந்து வந்து தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட தலைவர் கருப்பையா, இளைஞரணி மாவட்ட தலைவர் கார்த்திக், இளைஞர் அணி நகரச் செயலாளர் செல்வம், இளைஞர் அணி மாவட்டத் துணைத் தலைவர் சரவணன் மனோஜ் மாவட்ட பொருளாளர் கணேசன் சிவனடியார் சிவ முருகன்மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2