சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

தேனி மாவட்த்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.;

Update: 2022-05-27 16:09 GMT

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே காக்கில்சிக்கையன்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் அகமது மீரான் (வயது 21. ).இவர் நாலரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், உத்தமபாளையம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அகமதுமீரானை கைது செய்தனர்.வழக்கை விசாரித்த தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி சாந்திசெழியன் அகமது மீரானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் 3 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News