துண்டிக்கப்பட்ட தலையை மீண்டும் இணைத்த டாக்டர்கள் :மருத்துவ விந்தை..!
விபத்தில் துண்டான சிறுவனின் தலையை மீண்டும் கழுத்தில் பொருத்தி இஸ்ரேல் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.;
severed boy's head Reunited by the Doctors , medical miracle achievement, Israel doctors reunited the boy's head, World news today, world medical news
கை துண்டானால் அல்லது கால் துண்டானால் மீண்டும் பொருத்திய செய்திகளை நாம் படித்துள்ளோம். ஆனால் தலை துண்டாகி மீண்டும் பொருத்திய சம்பவம் இதுதான் முதன் முதலாக இருக்கும். அட..ஆமாங்க.. இஸ்ரேல் டாக்டர்கள் ஒரு சிறுவனின் துண்டான தலையை மீண்டும் பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.
இஸ்ரேலில் கார் விபத்தில் தலை சிதைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 12 வயது சிறுவனின் தலையை மீண்டும் கழுத்தில் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இஸ்ரேலின் பாலஸ்தீனியர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள மேற்கு கரை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சுலைமான் ஹூசைன். இவன் கடந்த சில வாரங்களுக்கு முன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு 50 சதவீதம் தலை துண்டாகிய நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக விமானம் மூலம் ஜெருசலேமில் உள்ள புகழ்பெற்ற ஹாடாசா மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் அவனை பரிசோதித்து 50 சதவீதம் தான் சிறுவனை காப்பாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். எனினும் பல மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் துண்டாகி இருந்த தலையை மீண்டும் கழுத்தில் பொருத்தினர். மருத்துவ துறையில் இது அரிதிலும் அரிதான இந்த மருத்துவ சிகிச்சை முறை என கூறப்படுகிறது. தற்போது கிகிச்சைக்கு பின் சிறுவன் குணமடைந்து டாக்டர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது மகனின் தலையை மீண்டும் பொருத்தி உயிருடன் மீட்டெடுத்த டாக்டர்களுக்கு சிறுவனின் தந்தை நன்றி தெரிவித்துள்ளார். கடவுளின் கருணையால் எனது மகன் எனக்கு மீண்டும் கிடைத்து விட்டதாக கூறினார். இது குறித்து சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர். ஓஹட் எய்னவ் கூறியதாவது: சிறுவனின் கழுத்தில் சேதமடைந்த பகுதியில் புது பிளேட்டுகள் பொருத்த வேண்டியிருந்தது. புதுமையான தொழில்நுட்பத்தினாலும், பல மணிநேரம் நடந்த ஒரு அறுவை சிகிச்சைக்கு பின் எங்களால் சிறுவனை காப்பாற்ற முடிந்தது என்றார்.