ஏழு வழக்கும் பயன்தரவில்லை சொத்துக்களை முடக்க முடிவு
ஏழு வழக்குகள் பதிவு செய்தும், கஞ்சா பதுக்கல், கடத்தலை நிறுத்தாத பெண்ணின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர் லதா. இவர் இப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் இவரிடம் கஞ்சா வாங்கிய சுரேஷ் மீதும் கஞ்சா விற்ற லதா மீதும் கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். லதா மீது ஏற்கனவே வடக்கு போலீசார் ஆறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். தேவதானப்பட்டி போலீசாரும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். இத்தனை வழக்குகள் பதிவு செய்தும், லதா கஞ்சா கடத்தல், பதுக்கல், விற்பனையினை நிறுத்தவில்லை. எனவே அவரது சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.