மதுரை குடிநீர் திட்டத்திற்கு எதிரான தொடர் ஓட்ட பாேராட்டம் தடுத்து நிறுத்தம்

மதுரை குடிநீர் திட்டத்திற்கு எதிரான தொடர் ஓட்டப்போராட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Update: 2022-06-03 11:54 GMT

மதுரை குடிநீர் திட்டத்தை எதிர்த்து கூடலுாரில் தொடர் ஓட்டப்போராட்டத்திற்கு தயாரான விவசாயிகள்.

கூடலுார் லோயர்கேம்ப் முல்லை பெரியாற்றில் இருந்து குழாய் வழியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல ராட்சத பைப்புகள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்தை மாற்று வழிகளில் செயல்படுத்த வேண்டும். தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும் என முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், பாரதீய கிஷான் விவசாயிகள் சங்கத்தினர் போராடி வருகின்றனர்.

இவர்கள் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் கவனத்தை கவரும் வகையில் கூடலுாரில் இருந்து தொடர் ஓட்டப்போராட்டம் அறிவித்தனர். அதன்படி கூடலுாரில் ஒன்று சேர்ந்த இவர்களை போலீசார் மறித்து கைது செய்தனர். இதன் மூலம் போராட்டம் நடத்த முடியாத சூழலை போலீசார் உருவாக்கி விட்டனர். தற்போது தடுத்தாலும், போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் தொடரப்போவதாக முல்லைச்சாரல் விவசாய சங்க தலைவர் கொடியரசன், பாரதீய விவசாய சங்க தலைவர் டாக்டர் சதீஷ்பாபு தெரிவித்தனர்.

Tags:    

Similar News