இறைச்சி மார்க்கெட், மீன்மார்க்கெட் தேனியில் அமைக்க வலியுறுத்தல்..!

தேனியில் இறைச்சி மார்க்கெட், மீன்மார்க்கெட் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-12-16 05:12 GMT

மட்டன் விற்பனை கடை (கோப்பு படம்)

தேனியில் 110 ஆட்டு இறைச்சி கடைகள், 150 மீன் கடைகள், 200 கோழி இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகள் நகர் பகுதி முழுவதும் ஆங்காங்கே பரவி இருப்பதால் கழிவுகளையும் கண்ட இடங்களில் கொட்டுகின்றனர்.

இதனால் நகரின் பல பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. ஆடுகளை யாரும் ஆடு, அடிக்கும் தொட்டியில் அடிப்பதில்லை. கடை வைத்துள்ள இடத்திலேயே அறுக்கின்றனர். மீன்கடைகள் அனைத்தும் ரோட்டோரமே .உள்ளன. இதனால் அந்த பகுதி முழுக்க மீன் கழிவுகளும், மீன் கழுவிய தண்ணீரையும் ஊற்றி விடுகின்றனர். இதனால் துர்நாற்றம் கடுமையாக உள்ளது.

மேலும் இவ்வாறு கண்ட இடங்களில் இறைச்சி மற்றும் மீன் கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரா சீர்கேடுகள் ஏற்படுகின்றன. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மீன் மார்க்கெட் கட்ட திட்டமிடப்பட்டு அறிக்கையும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆட்டு  இறைச்சி மார்க்கெட், மீன் இறைச்சி மார்க்கெட், கோழி இறைச்சி மார்க்கெட் தனியாக அமைத்து கொடுத்தால் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

அதுபோல் பழைய இறைச்சி விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். நகரின் பொது சுகாதாரமும் மேம்படும். மக்களுக்கும் தரமான இறைச்சிகள் ஒரே இடத்தி்ல் கிடைக்கும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தேனி நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என வியாபாரிகள் முறையீடு செய்துள்ளனர்.

Tags:    

Similar News