பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை

கொலை முயற்சி செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது;

Update: 2023-11-18 15:30 GMT

தேனி மாவட்டம், ஜெயமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழகாமக்காப்பட்டியில் குமரன் என்ற குமரேசன் என்பவர் தன்னைப் பற்றி தவறாக பேசி வந்த பொன்னுத்தாய் என்பவரை அசிங்கமாக பேசி, கட்டையால் தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்தும், கொலை முயற்சி செய்துள்ளார்.

இது சம்பந்தமாக பொன்னுத்தாய் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் இறுதியறிக்கை 16.09.2019 அன்று தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கு விசாரணை தேனி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பொறுப்பு (மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி) கோபிநாதன்

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் ஜெயமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் அளிக்கப்பட்ட தக்க சாட்சியின் அடிப்படையில் குமரன் என்ற குமரேசன் என்பவர் குற்றவாளி என சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதி செய்தார். அதன் அடிப்படையில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 2000/- அபராதம் விதித்தும் அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் மெய்க்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் திறம்பட வாதுரைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் குருவராஜ்.சிறப்பாக புலன் விசாரணை செய்த முன்னாள் ஜெயமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் குருவெங்கட்ராஜ், வழக்கின் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்திய தற்போதைய ஜெயமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கஜேந்திரன், மேலும் இந்த வழக்கில் சாட்சியங்கள் ஆஜர்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட நீதிமன்ற முதல் நிலைக்காவலர் (112)சுந்தர் ஆகியோரை தேனி மாவட்ட எஸ்.பி., டோங்கரே பிரவிண் உமேஷ் பாராட்டினார்.

Tags:    

Similar News