ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 42 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட 42 கிலோ கஞ்சாவை கம்பம் போலீசார் பறிமுதல் செய்தனர்.;
ஆந்திராவில் இருந்து கேரளாவி்ற்கு கடத்தப்பட்ட 42 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், கடத்தியதாக கேரளத்தை சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
கம்பம் தெற்கு போலீசார் கம்பம்மெட்டு ரோட்டில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கேரளா சென்ற காரை வழிமறித்து சோதனை செய்தனர்.
இதில் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 42 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் கடத்திச் சென்ற எர்ணாகுளத்தை சேர்ந்த அஜேஷ், 29, பாலக்காட்டை சேர்ந்த சந்தோஷ்குமார், 40, சுஜேஸ், 32 ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.