மணல் திருடிய மாட்டு வண்டிகள் பறிமுதல்: போடி டி.எஸ்.பி., பொறுப்பேற்றதும் அதிரடி

போடி டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற மறுநாளே டி.எஸ்.பி., சுரேஷ் மணல் திருட்டை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.;

Update: 2021-09-01 10:30 GMT

போடியில் மணல் திருடிய மாட்டு வண்டியை பிடித்து தாலுகா ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.

போடி டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற மறுநாளே (இன்று) டி.எஸ்.பி., சுரேஷ் மணல் திருடும் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தார்.

போடியில் நீண்ட நாட்களாக டி.எஸ்.பி., பணியிடம் காலியாகவே இருந்தது. இந்நிலையில், நேற்று டி.எஸ்.பி.,யாக சுரேஷ் பொறுப்பேற்றார். இன்று டி.எஸ்.பி., சுரேஷ், போடி தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் ஹலோ போலீஸ் காவலர் ஈஸ்வரன் ஆகியோருடன் சென்று நாகலாபுரம் ஓடையில் மணல் அள்ளிக்கொண்டிருந்த இரண்டு மாட்டு வண்டிகளை பிடித்து ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து நிறுத்தினார்.

போடியில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி ஓரிடத்தில் குவித்து வைத்து இரவில் லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு, பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் கனிமவள திருட்டால், நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஒரு சிலர் இதனை தொடர்ந்து செய்கின்றனர்.

இந்த விஷயத்தை டி.எஸ்.பி., கவனத்திற்கு கொண்டு சென்றதும் முதல் நடவடிக்கையாக இதனை தடுக்கும் பணிகளில் இறங்கி உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News