தேனி மாவட்டத்தில் இறுதிக்கட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப்பணிகள்

தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன

Update: 2023-12-14 16:10 GMT

வழக்கமாக தேனி மாவட்டத்தில் ஜூலை மாதம் முதல் போக நெல் சாகுபடியும், அக்டோபர் மாதம் இரண்டாம் போக நெல் சாகுபடியும் நடக்கும். இந்த ஆண்டு தென்கிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியதோடு, சரியாக கிடைக்கவில்லை. ஆனால் வடகிழக்கு பருவமழை நல்ல முறையில் கை கொடுத்தது. இதனால் கடந்த நான்கு மாதங்களாகவே முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் சராசரியாக 130 அடி வரை இருந்து வருகிறது. அணைக்கு நீர் வரத்தும் வெளியேற்றமும் சீராக இருந்து வருகிறது. குறைந்தபட்சம் இன்னும் 15 நாள் வரை மழை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.

இதனால் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் முதல் போக நெல் அறுவடைப்பணிகள் நடந்து வருகின்றன. பல இடங்களில் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து விட்டன. அறுவடை முடிந்த நிலங்களில் உடனடியாக உழவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடவுப்பணிகளும் நடந்து வருகின்றன.

இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‛கம்பம் பள்ளத்தாக்கில் அறுவடை தாமதமாக தொடங்கினாலும், முன்கூட்டியே நாற்றங்கால் தயாரிக்குமாறு நாங்கள் விவசாயிகளை அறிவுறுத்தி இருந்தோம். இதனால் அறுவடை முடிந்த உடனே அவர்கள் நடவுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நடவுப்பணிகள் நடந்த நிலங்களுக்கு தேவையான அளவு நீர் அணையில் உள்ளது. மார்ச் இரண்டாம் வாரத்திற்குள் இரண்டாம் போக நெல் அறுவடையும் முடிந்து விடும். அணை நீர் மட்டம் திருப்தியாக இருப்பதாலும், மழைக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாலும் குடிநீர் பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை.’ இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News