நாட்டாமை தீர்ப்பை மாற்றிய தருணங்கள்..!

நடிகர் சரத்குமார் அரசியல் பயணத்தில் சந்தித்த வளைவுகள் பற்றி பார்க்கலாம்.

Update: 2024-03-13 04:05 GMT

சரத்குமார் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை (கோப்பு படம்)

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல், கேப்டன் விஜயகாந்த் என்பது போல் சரத்குமாருக்கு திரையுலகம் வழங்கிய பட்டம் நாட்டாமை. ஆமாம் நாட்டாமை சரத்குமார் என்றே பலரும் அவரை அழைக்கின்றனர். அந்த அளவு சரத்குமார் தனது திரையுலக வாழ்வில் வெற்றி பெற்று மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

முதன் முறையாக 1996ம் ஆண்டு நடிகர் சரத்குமார் அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,- தா.ம.கா., கூட்டணிக்கு ஆதரவு வழங்கினார். அந்த தேர்தலி்ல தி.மு.க., வெற்றி பெற்றதும் அக்கட்சியில் இணைந்து பணியாற்றினார். 1998ம் ஆண்டு தி.மு.க., வேட்பாளராக நெல்லையில் களம் இறங்கி தோல்வியடைந்தார். 2001ம் ஆண்டு தி.மு.க.,வின் சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் அரசியல் சூழலில் சிக்கி 2006ல் தனது மனைவி ராதிகாவுடன் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.,வில் இணைந்தார். அதே ஆண்டு அ.தி.மு.க.,வில் இருந்து ராதிகா நீக்கப்பட்டதால், சரத்குமாரும் அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் 2007ம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். 2011ம் ஆண்டு அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து சட்டசபை தேர்தலி்ல் போட்டியிட்டு, தனது கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.,க்களை பெற்றார்.

2016ம் ஆண்டு அ.தி.மு.க., கூட்டணியில் திருச்செங்கோடு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021ம் ஆண்டு தேர்தலில் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி அமைத்து 33 இடங்களிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2024ம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க.,வில் இணைத்துள்ளார். இந்த ஆண்டு துாத்துக்குடி தேர்தலில் பா.ஜ.க., வேட்பாளராக களம் இறங்க உள்ளார். 

Tags:    

Similar News