பெரியாறு அணையில் ரூல்கர்வ் நீக்கம்? உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

Mullaperiyar Dam News -முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறையினை நீக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Update: 2022-09-16 03:15 GMT

பைல் படம்

Mullaperiyar Dam News -முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம்கோர்ட் இரண்டு முறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் நீர் மட்டத்தை உயர்த்த விடாமல் கேரளா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அதேபோல் பேபி அணையினை பலப்படுத்திய பின்னர் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் பேபி அணையினை பலப்படுத்த விடாமல் கேரளா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதற்கிடையில், பலமாக உள்ள அணைக்கு சம்பந்தம் இல்லாத ரூல்கர்வ் முறையினை கேரளா சார்பில் சிலர் சுப்ரீ்ம் கோர்ட் மூலமே கொண்டு வந்து விட்டனர். இந்த வழக்கினை தமிழகம் சரியாக கையாளாமல் விட்டதால், தற்போது ரூல்கர்வ் அமல்படுத்தப்பட்டு, நீர் மட்டம் 142 அடிவரை உயர்த்தக்கூட முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஐந்து மாவட்ட விவசாயிகளின் உதவியுடன் 'பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறையினை நீக்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கு பட்டியலிடப்பட்டு விட்டது. விரைவில் விசாரணைக்கு வரும் என இச்சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News