ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரை வெட்டியவர்கள் கைது
கம்பம் அருகே ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரை வெட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.;
கம்பம் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் ரவிக்குமார். இவரை சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் வெட்டி பலத்த காயத்தை ஏற்படுத்தினர். இது தொடர்பாக கம்பம் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கம்பத்தை சேர்ந்த முகமது வாஜித், 36, சதாம் உசேன், 31, ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.