வேலை வாங்கித்தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: இளைஞர் மீது வழக்குப்பதிவு

வேலை வாங்கித்தருவதாக கூறி 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த திருப்பூர் வாலிபர் மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;

Update: 2021-11-14 03:28 GMT

பைல் படம்

வேலை வாங்கித்தருவதாக கூறி 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த திருப்பூர் வாலிபர் மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், வருஷநாடு அருகே மயிலாடும்பாறையை சேர்ந்தவர் பாக்கியம். இவரது மகன் பிடெக் பட்டதாரி. இவருக்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, திருப்பூர் பெருமாள்நல்லுாரை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் பாக்கியத்திடம் 3 லட்சம் பணம் வாங்கி விட்டார். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை. பாக்கியம் கொடுத்த புகாரில் ஜெயராஜ் மீது கடமலைக்குண்டு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News