ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு
ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி, 23 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இருவர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி, 23 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இருவர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெரியகுளம் பழைய சந்தை ரோட்டை சேர்ந்தவர் ராமாயியம்மாள் 62. இவர் கல்வித்தறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் வத்தலக்குண்டு வட்டார கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காமராஜ்நகரை சேர்ந்த செல்வத்தின் மகன் ராஜா, மருமகள் சோனியாகாந்திக்கு ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி 23 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர். வேலையும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் திரும்பத்தரவில்லை. இது குறித்து செல்வம் கொடுத்த புகாரில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராமாயியம்மாள், மாரியம்மாள் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.