கம்பம் அடகு கடையில் ரூ.12 லட்சம் மோசடி: 6 பேர் மீது வழக்குப்பதிவு

கம்பம் நகை அடகு கடையில் 12 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;

Update: 2021-11-14 03:42 GMT

பைல் படம்

தேனி மாவட்டம், கம்பம் நெல்குத்தி புளியரம் தெருவை சேர்ந்தவர் கவுதம். இவர் ஸ்ரீஅன்னை பேங்கர்ஸ் என்ற அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கார்த்திகா என்பவர் வேலைக்கு சேர்ந்தார். இதனால் கம்பம் கடையினை கார்த்திகா பொறுப்பில் கொடுத்து விட்டு, கவுதம் வேறு ஊரில் உள்ள தனது கடையின் கிளையினை கவனித்து வந்தார்.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கார்த்திகாவும் அவரது நண்பர்கள் ஈஸ்வரன், ஜோதி, மதன், சுமதி, கார்த்திகா ஆகிய 5 பேருடன் சேர்ந்து போலி பில்கள் தயார் செய்து, தரக்குறைவான நகைகளை அடமானம் பெற்றதாக கூறி பொய் கணக்கு எழுதி 12 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. கவுதம் கொடுத்த புகாரில் கம்பம் போலீசார் ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News