போடி அருகே டூவீலரில் சென்ற வாலிபர் விபத்தில் உயிரிழப்பு
போடி அருகே, டூ வீலரில் வேகமாக சென்ற வாலிபர், தடுமாறி விழுந்து காயமடைந்து இறந்தார்.;
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், சின்னக்கானல் அருகே வேநாடு முட்டுக்காடு டிவிசனில் வசித்து வந்தவர் அன்பரசு, 37. இவர் டூ வீலரில் தேனி வந்து விட்டு, சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
போடி ரோட்டில் ஆர்.எம்.டி.சி., காலனி அருகே வேகமாக சென்ற போது, டூ வீலர் நிலை தடுமாறி மண்மேட்டில் ஏறி உருண்டது. இதில் பலத்த காயமடைந்த அன்பரசு, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.