அரசுத்துறைகளில் அதிகரிக்கும் லஞ்சம்: புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி புகார்

தமிழக அரசுத்துறைகளில் லஞ்சம் அதிகரித்து விிட்டதாக புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி புகார் எழுப்பி உள்ளது;

Update: 2022-04-07 07:01 GMT

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்.

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட சிறப்புக்குழு கூட்டம் மாவட்டக்குழு உறுப்பினர் கி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜதுரை முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கண்ணன், விமல்ராஜ், மோகன்ராஜ், ஜெய்சிங், தமரைச்செல்வன், செல்வன், ராஜபாண்டி, முத்துராஜ், சுந்தர், சரணவக்குமார், பிரபுதாஸ், பிரதீப்குமார், ஜான்பீட்டர், அருண்குமார், தங்கப்பாண்டி, முருகானந்தம், மாடசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தேனி மீறு சமுத்திரம் கண்மாய் ஆக்கிரமி்ப்புகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். பழைய ஸ்ரீராம் தியேட்டர் - அரண்மனைப்புதுார் திட்டச்சாலையை இணைக்க வேண்டும். தேனி பழைய பஸ்ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அரசுத்துறைகளில் விரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News