தேனியில் மனுக்களை மூட்டை கட்டி புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி போராட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் மனுக்களை மூட்டை கட்டி வைத்து போராட்டம் நடத்தினர்.;
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் மனுக்களை மூட்டையாக கட்டி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு வைத்து போராட்டம் நடத்தினர்.
அக்கட்சி மாவட்ட செயலாளர் ராஜதுரை, தேனி ஒன்றிய செயலாளர் முருகானந்தம், தேனி நகர செயலாளர் மாடசாமி உட்பட பலர் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக மனுக்களை மூட்டையாக கட்டி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீர் நிலைகள், பஞ்சமி நிலங்கள், அரசு நிலங்களை போலி பட்டா போட்டு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இவற்றை மீட்க வேண்டும். நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல நுாறு கோரிக்கைகள் சம்மந்தமாக மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.