சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு: இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்
தேனி நகர இந்து எழுச்சி முன்னணி நகர செயலாளர் அரண்மனை முத்துராஜ் ஜீ தலைமையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.;
தேனி கலெக்டரிடம் மனு கொடுத்த இந்து எழுச்சி முன்னணியினர்.
தேனி நகர இந்து எழுச்சி முன்னணி நகர செயலாளர் அரண்மனை முத்துராஜ் ஜீ தலைமையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறி உள்ளதாவது: தேனி கிழக்கு சந்தை வழியாக தினமும் தனியார் பள்ளியைச் சேர்ந்த 7000 பள்ளி மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். பள்ளி வாகனங்களும் இங்கு வந்து செல்கின்றன. ஆனால் காலையில் பள்ளிக்கு செல்லும் நேரம் காலை 8:30 முதல் 9.15 மணி வரையிலும், மாலையில் பள்ளி முடிந்து திரும்பும் நேரம் 3.00 மணி முதல் 4.30 வரையிலும் சரக்கு லாரிகள், சரக்கு வேன்கள் அதிக அளவில் அங்கு நிறுத்தப்படுகின்றன.
பள்ளி வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சரக்கு வாகனங்களை வேண்டுமென்றே நிறுத்தி வைப்பதும் நடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் அழைத்து வரப்படும் குழந்தைகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. பெரியகுளம் சாலையில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியில் காவலர் ஒருவர் மட்டும் ஈடுபடுத்தப்படுகிறார்.
மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் நேரங்களில் சரக்கு வாகனங்கள் வருவதை தடுக்க வேண்டும். அதற்கான தடையை கடந்த காலங்களில் இருந்தது போல் மீண்டும் அமல்படுத்துவதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். ஆயிரக்கணக் கான குழந்தைகள் நலனா? நான்கு ஐந்து வியாபாரிகள் நலனா? என்றால் இங்கு வியாபாரிகளின் நலனே முதன்மையாக பார்க்கப்படுகிறது வேதனையாக இருக்கிறது காவல்துறை கவனத்திற்கு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குழந்தைகள் நலனுக்கு எதிரானது. எனவே குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். விரைவில் தேர்வுகள் வருகின்றன.
மாணவ மாணவிகள் வெயிலில் சிக்கி உளவியல் நெருக்கடியுடன் தேர்வு எழுதச் செல்லும் நிலைமை ஏற்படாமல் தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமையாக நினைக்கிறோம். பள்ளி குழந்தைகள் நலன் கருதி சரக்கு வாகனங்கள் கிழக்கு சந்தை பகுதிக்கு வந்து செல்வதற்கான நேரம் நிர்ணயம் செய்ய வேண்டும் பள்ளி குழந்தைகள் வந்து செல்லும் நேரங்களில் சரக்கு வாகனங்கள் நுழைய தடை விதிக்க வேண்டும்.பங்களாமேடு பாரஸ்ட்ரோடு பிரிவில் விபத்து அதிகமாக நடைபெறுவதால் அந்த இடத்தில் வேகத்தடை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.
இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஜீ, நகர தலைவர் செல்வபாண்டியன், நகர துணை தலைவர் நாகராஜ் ஜீ, நகர அமைப்பாளர் சிவராம் ஜீ சட்ட உரிமை கழகம் தினேஷ் ஜீ, நகரதுணை செயலாளர்கள் ஜீவா ஜீ ராமகிருஷ்ணன் ஜீ இந்து எழுச்சி முன்னணி ஒன்றிய தலைவர் கோம்பை இளம்பரிதி ஜீ, வாழையாத்துபட்டி கோடீஸ்வரன் ஜீ அரண்மனை சரவணன் ஜீ, செல்வகுமார் ஜீ ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
தேனி மாவட்ட சிறுபல சரக்கு வியாபாரிகள் நலச்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்:
மாவட்ட துணைத்தலைவர் இராமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆரோக்கியபிச்சை முன்னிலை வகித்தார். துணை செயலாளர் இராஜபாண்டி அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ஆத்தியப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கவர்ச்சியான விளம்பரங்களில் நம் உறுப்பினர்கள் ஏமாற்றம் அடையாமல் அரசு உடமையாக்கப்பட்ட நம்பிக்கையான நிறுவனங்களில் தங்கள் சேமிப்புகளை முதலீடு செய்து பாதுகாப்பு செய்ய வேண்டும். நம் உறுப்பினர்கள் அனைவரும் உடல் நலம் பேண தினசரி உடற் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும். நம் சங்க உறுப்பினர்கள் தரமான பொருட்களையே வாங்கி விற்பனை செய்ய வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் சங்க ஆலோசகர் நவநீதன் நன்றி கூறினார்.