தமிழகத்தில் மகளிர் வங்கி தொடங்க முதல்வருக்கு கோரிக்கை

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க மகளிர் வங்கி தொடங்க வேண்டும் என தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.;

Update: 2022-04-30 03:02 GMT

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் வி.ஆர்.,ராஜன்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க மகளிர் வங்கி தொடங்க வேண்டும் என தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் வி.ஆர்.ராஜன் முதல்வருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில், மகளிர் குழுக்கள் லாபகரமாக தொழில் செய்ய மாவட்டம் தோறும் மகளிர் தொழில் பூங்கா அமைக்க வேண்டும். லாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை கண்டறிந்து பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் மூலமாக பயிற்சி அளித்து உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை உருவாக்கித்தர வேண்டும்.

தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள், நிர்வாகிகள் நலனுக்காக நலவாரியம் தொடங்க வேண்டும். நகர்ப்புறத்திலும், கிராமப்பகுதியிலும் இருக்கும் பயன்படாத அரசு கட்டடங்களை மகளிர் குழுக்களிடம் வழங்கி அங்கு அவர்கள் தொழில்புரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மாவட்டந்தோறும் மைக்ரோ பைனான்ஸ்கள் அதிகளவில் பெருகி மகளிர்களுக்கு அதிகளவில் கடன் வழங்கி, அடாவடியாக வசூல் செய்து வருகின்றன. இதனை தடுக்கவும், மைக்ரோ பைனான்ஸ்களிடம் இருந்து மகளிர்களை பாதுகாக்கவும் தமிழகம் முழுவதும் மகளிர் வங்கி தொடங்கி ஒரு மகளிர் குழுவிற்கு 25 லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News