ராமனாதபுரம் பகுதியில் பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு
மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட பாசனங்களுக்கு வைகை அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது;
தேனி மாவட்டம், வைகை அணைக்கு விநாடிக்கு 3000ம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் 70 அடியை எட்டி உள்ளது. மொத்த நீர் மட்டம் உயரம் 71 அடியாகும். எனவே வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக விநாடிக்கு 3000ம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தவிர மதுரை மாவட்ட பாசனத்திற்கு விநாடிக்கு 900ம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.