விலையில் செஞ்சுரி அடிக்கத் தயாராகும் சின்ன வெங்காயம், தக்காளி...!

Today Vegetable Price -தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்வதால் காய்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.;

Update: 2022-10-18 06:00 GMT

பைல் படம்

Today Vegetable Price -தேனி மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. இன்னும் நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீபாவளி வரை மழை தொடரும் வாய்ப்புகள் உள்ளது. இந்த மழையால் விவசாய நிலங்களில் நீர் அதிகம் தேங்கி காய்கறி விளைச்சலும், விளைந்த காய்கறிகளை சேகரிக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் காய்கறி வரத்து குறைய தொடங்கி உள்ளது.

ஐப்பசி தொடங்கி விட்ட நிலையில் முகூர்த்த நாட்களும் தொடர்ச்சியாக வருகின்றன. இதனால் காய்கறிகளின் விலைகள் விர்ரென உயர்ந்து வருகின்றன. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக கிலோ 25 ரூபாய், 30 ரூபாய் என இருந்த சின்ன வெங்காயம் தற்போதே 75 ரூபாயினை கடந்து விட்டது. இன்னும் ஓரிரு நாள் மழை பெய்தால் சின்ன வெங்காயத்தின் விலை 100ஐ தாண்டி விடும். அதேபோல் கிலோ 5 ரூபாய், 10 ரூபாய் என விற்கப்பட்ட தக்காளி இன்று 40 ரூபாயினை எட்டி உள்ளது.

மழை பெய்தால் முதலில் தக்காளி சாகுபடி தான் அடி வாங்கும். அடுத்த தான் வெங்காயம் உள்ளிட்ட காய்றிகள் அடி வாங்கும். தக்காளி விலை கடந்த ஆறு நாள் மழையில் கிலோ 40ஐ தாண்டி விட்டது. இனியும் மழை தொடர்ந்தால் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து தக்காளியும் விலையில் சென்சுரி அடித்து விடும் என விவசாயிகள் தெரிவித்தனர். கடந்த நான்கு மாதங்களாகவே சின்னவெங்காயம் விலை வீழ்ச்சியடைந்து இருந்ததால், அப்போது அறுவடை செய்த விவசாயிகளில் பலர் தங்கள் தோட்டங்களில் வெங்காய பண்டறை அமைத்து அறுவடையான சின்ன வெங்காயத்தை நஷ்டத்திற்கு விற்காமல், சேமித்து வைத்திருந்தனர்.

தற்போது விலை விர்ரென உயர்கிறது. மழையால் புதிய சாகுபடி வெங்காயம் அழுகத் தொடங்கி விட்டது. இதனால் இருப்பு வைத்திருக்கும் வெங்காயத்திற்கு மவுசு அதிகரித்துள்ளது. விவசாயிகள் வைத்த விலைக்கு வாங்க வேண்டிய நிர்பந்தம் வியாபாரிகளுக்கு உருவாகி உள்ளது. நான் சொன்ன விலைக்கு வாங்கு, இல்லாவிட்டால் நஷ்டமில்லை, சின்ன வெங்காயம் பண்டறையில் இருக்கட்டும். பல மாதங்களுக்கு கெடாது என விவசாயிகள் கெத்து காட்டி, நல்ல விலைக்கு விற்கு வருகின்றனர். 

தேனி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை நிலரவம் (கிலோவிற்கு ரூபாயில் விலை) : கத்தரிக்காய்- 15, வெண்டைக்காய்- 30, கொத்தவரங்காய் -24, பாகற்காய்- 50, பீர்க்கு- 40, முருங்கைகாய்- 60, அவரைக்காய்- 65, உருளைக்கிழங்கு- 45, சேப்பங்கிழங்கு- 35, வெள்ளைப்பூண்டு- 160, பீட்ரூட்- 35, முருங்கை பீன்ஸ்- 60, பட்டர்பீன்ஸ்- 170, சோயாபீன்ஸ்- 130, கேரட்- 40, சேப்பங்கிழங்கு- 50, நுால்கோல்- 25, முள்ளங்கி- 20 என விற்கப்படுகிறது. மொத்தம் 60 வகையான காய்கறிகள் தேனி உழவர்சந்தையில் தினசரி விற்பனையாகி வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News