சாரைப்பாம்பு... சுவாரஸ்ய தகவல்கள்

என் பெயர் சாரைப் பாம்பு, என்னிடம் கொஞ்சமும் விஷம் கிடையாது. பார்க்கத்தான் பத்தடி நீளம் இருப்பேன்...

Update: 2023-05-20 06:30 GMT

கோடை காலம் தகிக்கிறது. வெப்ப அலைகள் தாங்காமல் பாம்புகள்... தங்கள் வசிப்பிடமான புற்றுக்களில் இருந்து வெளியே உலா வருகிறது. அடுத்து வரும் மழைக்காலங்களிலும் பாம்புகள் அதிகம் வெளியில் உலவும்.

எனவே இயற்கை ஆர்வலர்கள் பம்புகளை அடித்து கொல்ல வேண்டாம். பாம்புகளை கண்டால் பிடித்து வனத்திற்குள் விட்டு விடுங்கள் என்ற வேண்டுகோளை வித்தியாசமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதாவது சாரைப்பாம்பு கடிதம் எழுவதை போல் ஒரு கடிதம் எழுதி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். நம் வாசகர்களின் பார்வைக்கு அதனை வெளியிட்டுள்ளோம்.

என் பெய் சாரைப்பாம்பு. பார்க்க பத்து அடி நீளம் வரை இருப்பேன். ஆனால் என்னிடம் விஷம் இல்லை. பரபரப்பா இங்குமங்கும் ஓடுவேன். அது எல்லாம் உங்களை தொந்தரவு செய்வதற்காக இல்லை. உங்களின் வயல்வெளிகளில் நெல், கேழ்வரகு, வேர்கடலை போன்ற தானியங்களை கொள்ளை அடிக்கும் எலிகளையும் அதனை போல சிலவற்றையும் பிடிக்கத்தான். அதனால் விவரம் தெரிந்தவர்கள் என்னை விவசாயிகளின் நண்பன் என்றும் சொல்வார்கள் .

அதே போல எனக்கும் நல்ல பாம்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ...அன்புள்ளங்களே.....அடுத்து வரும் மழைக் காலங்களில் என் சகோதரர்கள் யாராவது உங்கள் இருப்பிடங்களில் தவறி வந்துவிட்டால் வனத்துறையை, தீயணைப்பு துறையை அல்லது பாம்புகளை மீட்கும் தன்னார்வளர்களை அணுகுங்கள். அவர்கள், அவசியம் உங்களுக்கு உதவுவார்கள், ஏனெனில் அவர்களை போன்றவர்கள் மட்டுமே எங்களை காப்பாற்றும் எண்ணம் கொண்டவர்கள் ...நண்பர்களே, நம்புங்கள் நாங்கள் நல்லவர்கள்...இயற்கையோடு ஒன்றிவாழும் எங்களை விட்டுவிடுங்கள், உங்களுக்கு நல்லதே செய்வேன். .இப்படிக்கு சாரைபாம்பு..

Tags:    

Similar News