தேனி: ரேஷனில் தரமற்ற அரிசி வினியோகம் என்று பொதுமக்கள் அதிருப்தி

தேனி மாவட்டத்தில், ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2022-03-19 14:00 GMT

கோப்பு படம் 

தேனி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவது குறித்து பல முறை புகார்கள் எழுந்தன. இது குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து கலெக்டர் முரளீதரன், இது தொடர்பாக ஆய்வு நடத்தினார். அதன் பின்னர் தரமான அரிசி வழங்கப்பட்டது.

தற்போது ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியின் தரம் குறைந்து விட்டது. மிகவும் கருப்படித்த, மக்கு வாடையுடன் கூடிய தரக்குறைவான அரிசியை விநியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக கோடாங்கிபட்டியில் இப்படி தரக்குறைவாக விநியோகிக்கப்பட்ட அரிசி குறித்து வழங்கல்துறை உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தும் பலன் இல்லை என புலம்பி வருகின்றனர்.

Tags:    

Similar News