உத்தமபாளையத்தில் ரம்ஜான் பரிசு பொருட்கள்: எம்.எல்.ஏ., வழங்கல்
உத்தமபாளையத்தில் ரம்ஜான் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உத்தமபாளையம் 18வது வார்டு கவுன்சிலர் முகமது ஆதம் தன் வார்டு மக்களுக்கு ரம்ஜான்பண்டிகை அன்று பிரியாணி சமைக்க தேவைப்படும் அரிசி உட்பட அத்தனை பொருட்களையும் வழங்கினார். பரிசு பொருட்கள் அனைத்தும் சுற்றுச்சூழலை கெடுக்காது துணிப்பையில் வைத்து வழங்கப்பட்டது. கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், உத்தமபாளையம் பேரூராட்சி தலைவர் முகமதுகாசிம், பேரூராட்சி செயலாளர் முகமதுமீரான், கம்பம் குரு.இளங்கோ உட்பட பலர் பங்கேற்று பரிசு பொருட்களை மக்களுக்கு கொடுத்தனர்.