தேனி மாவட்டத்தில் மழை பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-11-10 03:15 GMT

பைல் படம்

தேனி மாவட்டத்தில் தொடரும் மழையால் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் பலத்த மழை பெய்தது. வானம் கடும் மேகமூட்டத்துடன் பகல் பொழுது கூட இருளடைந்து காணப்படுகிறது. தொடர்ந்து மிகுந்த ஈரப்பதம் மிகுந்த காற்றும், சாரலும் இருந்து கொண்டே உள்ளது. இதனால் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்ற மாவட்ட கலெக்டர் முரளீதரன் இன்று தேனி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாகவும், பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News