தேனி மாவட்டம் முழுவதும் பலத்த மழை: மக்கள் உற்சாகம்
வெயில் கடுமையாக வாட்டி வந்த நிலையில், மாவட்டம் முழுவதும் பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. அவ்வப்போது திடீரென மழை பெய்கிறது. சில இடங்களில் மட்டும் பெய்து வந்த மழை, நேற்று மாவட்டம் முழுவதும் பரலாக பெய்தது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிபட்டியில் 30.6 மி.மீ., தேனி அரண்மனைப்புதுாரில் 43 மி.மீ., போடியில் 25.2 மி.மீ., கூடலுாரில் 87.4 மி.மீ., மஞ்சளாறு அணையில் 2 மி.மீ., பெரியகுளத்தில் 86 மி.மீ., பெரியாறு அணையில் 35 மி.மீ., தேக்கடியில் 44.6 மி.மீ., சோத்துப்பாறையில் 27 மி.மீ., உத்தமபாளையத்தில் 9 மி.மீ., வைகை அணையில் 3.8 மி.மீ., வீரபாண்டியில் 29 மி.மீ., மழை பதிவானது. இந்த மழையால் வெயிலின் கடுமை குறைந்ததது.
வானம் இருள் அடைந்த மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஈரப்பதம் நிறைந்த சில் என்ற காற்று வீசியது. இதனால் வெயிலின் தாக்கம் மிகவும் குறைந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.