தேனி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை தொடர்ந்தது

தேனி மாவட்டத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது.

Update: 2022-01-02 03:32 GMT

 மழை ( கோப்பு படம் )

தேனி மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பின்னர், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை இல்லை. இந்நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் மீண்டும் மாவட்டத்தில் மழை பெய்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிபட்டியில் 10.4 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 5.4 மி.மீ., போடியில் 4.8 மி.மீ., கூடலுாரில் 4.8 மி.மீ., மஞ்சளாறு அணையில் 42 மி.மீ., பெரியகுளத்தில் 28 மி.மீ., பெரியாறு அணையில் 2.4 மி.மீ., தேக்கடியில் 7 மி.மீ., சோத்துப்பாறையில் 8 மி.மீ., உத்தமபாளையத்தில் 2.2 மி.மீ., வைகை அணையில் 12.8 மி.மீ., வீரபாண்டியில் 7.4 மி.மீ., மழை பதிவானது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஈரப்பதம் நிறைந்த குளிர்காற்று வீசுகிறது.

Tags:    

Similar News