வைகை நீர் மட்டம் அதிகரித்ததால் நீரில் மூழ்கிய பம்பிங் கிணறுகள்

வைகை அணை நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் குன்னுார் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட பம்பிங் கிணறுகள் நீரில் மூழ்கி உள்ளன.;

Update: 2021-08-10 04:15 GMT

குன்னூர் வைகை ஆற்றில் நீரில் மூழ்கிய கிணறுகள்

வைகை அணை நீர்மட்டம் 68.04 அடியாக உள்ளதால், குன்னுார் வைகை ஆறு வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் குன்னுார் வைகை ஆற்றுக்குள் உள்ள பம்பிங் கிணறுகள் நீரிழ் மூழ்கி உள்ளன. வடிகட்டப்படாத இந்த குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்படுவதால் காய்ச்சி குடிக்க வேண்டும் என்று சுகாதாரத்தறை அறிவுறுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் வைகை அணை நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 68.04 அடியாக உள்ளது. நீர் மட்டம் முழுமையாக உள்ளதால், அணையில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள குன்னுார் வைகை ஆறு வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. குன்னுார் வைகை ஆற்றில் நீர் மட்டம் உயரம் 20 அடிக்கும் மேல் உள்ளது.

குன்னுார் வைகை ஆறு மிகவும் அதிகமான மணல் செறிவு நிறைந்த இடம். எனவே இங்கு 20க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய பம்பிங் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பம்பிங் கிணறுகள் மூலம் உறிஞ்சப்படும் நீர் நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. தேனி நகர் பகுதிக்கும் இங்கிருந்து குடிநீர் சப்ளையாகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி., அலுவலக வளாகம், பெருந்திட்ட வளாகம் பகுதிகளிலும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மணல் செறிவு அதிகம் இருப்பதால் இப்பகுதியில் உள்ள பம்பிங் கிணறுகளுக்குள் வடிகட்டப்பட்ட நீரே ஊறும். அந்த நீரை பம்பிங் செய்து குளோரினேசன் செய்து சப்ளை செய்வார்கள்.

தற்போது நீர் மட்டம் உயர்வால் பல பம்பிங் கிணறுகள் நீருக்குள் மூழ்கி விட்டன. இதனால் பம்பிங் கிணறுகளுக்குள் வடிகட்டப்படாத நீரும் இறங்கி உள்ளது. இந்த நீரே தற்போது குடிநீராக சப்ளை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என பொதுமக்களை சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News