அடிப்படை வசதி கேட்டு சாலைப் பணிகளை நிறுத்திய பொதுமக்கள்

போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் சாலைப் பணிகளை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது;

Update: 2021-12-26 06:45 GMT

போடி அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் அடிப்படை வசதி கேட்டு ரோடு பணிக்கு ஜல்லி கொட்ட வந்த லாரியை தடுத்து நிறுத்தினர்.

போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலைப்பணிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

போடி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் புதுக்காலனி, ஜெயம்நகர் பகுதியில் சாலையை சீரமைக்க ஜல்லிகற்கள் கொட்டப்பட்டது. அங்கு வந்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை. குப்பைகள் அகற்றப்படவில்லை. பன்றிகளின் தொல்லை, கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. மழைக்காலத்தில் தேங்கிய நீர், 15 நாட்களுக்கு மேல் ஆகியும் வழிந்தோட வழியின்றி தேங்கி நின்று, துர்நாற்றம் வீசுகிறது. இதனை சரி செய்த பின்னர் சாலையை சீரமைக்க வேண்டும் எனக்கூறி பணிகளை தடுத்து நிறுத்தினர். பஞ்சாயத்து தலைவர் லோகநாதன், இன்ஸ்பெக்டர் சரவணன்  ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி கூறிய பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News