முத்தாலம்மன் கோயில் விழாவில் தேவராட்டம் ஆடிய பொதுமக்கள்
ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டி கோயில் விழாவினை பொதுமக்கள் தேவராட்டம் ஆடி கொண்டாடினர்.;
ஆண்டிபட்டி சித்தார்பட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் முத்தாலம்மன் கோயில் விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் தங்கள் வீடுகளில் உள்ள கால்நடைகளுக்கு பொதுமக்கள் அலங்காரம் செய்தனர். அவர்களை தங்களது முன்னோர்களாக கருதி ஊர்வலமாக அழைத்து வந்து வழிபட்டனர்.
பொதுமக்களும், முதியவர்கள் போலவும், ராஜா, ராணி போலவும் வேடர்கள் போலவும் பல்வேறு வேடங்கள் தரித்து தேவராட்டம் ஆடிக் கொண்டே ஊர்வலமாக வந்தனர்.