குடியரசு தின ஊர்திக்கு தேனியில் பொதுமக்கள் வீரவணக்கம்

தேனி வந்த தமிழக அரசின் குடியரசு தின ஊர்திக்கு மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்து வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

Update: 2022-02-08 08:00 GMT

தேனி பங்களாமேட்டில் நிறுத்தப்பட்டிருந்த தமிழக அரசின் சுதந்திரதின ஊர்திக்கு தமிழ்புலிகள், மார்க்சிஸ்ட் கட்சியினர் வீரவணக்கம் செலுத்தி கோஷமிட்டனர்.

தமிழக அரசின்  குடியரசுர தின ஊர்திக்கு தேனியில் பொதுமக்கள் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் குடியரசு  தினவிழா ஊர்தி, இன்று காலை தேனி வந்தது. தேனி பங்களாமேட்டில் நிறுத்தப்பட்டிருந்த இந்த ஊர்தியை கலெக்டர் முரளீதரன், எஸ்.பி. பிரவீன்உமேஷ் டோங்கரே உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். ஊர்தியில் வைக்கப்பட்டிருந்த தியாகிகளின் உருவச்சிலைகளுக்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அதிகளவில் ஊர்தியை பார்த்து வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். இன்று மதியம் 12 மணிக்கு தமிழ்புலிகள் அமைப்பின் நிர்வாகிகள் தலித்ராயன், விடுதலைசேகர், மாரி, தமிழ்பிரபா, வீரபாண்டியன், ராமராஜ், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், விவசாய சங்க தலைவர் கண்ணன் உட்பட பலர் வீரவணக்கம் செலுத்தி, சுதந்திர தியாகிகளை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News