தேனி மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்
Theni News Today- தேனி மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.;
Theni News Today- தேனி மாவட்டத்தில் போடி அருகே ஒரு கிராமத்தில் ஆறு கடைகளை உடைத்து திருடப்பட்டது. மறுநாள் கம்பத்தில் ஆறு கடைகளை உடைத்து திருடு போனது. தொடர்ந்து மூன்றாவது நாள் தேனியில் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே ஆறு கடைகளை உடைத்து கும்பல் திருடியது.
இந்நிலையில் தேனி பங்கஜம் ஹவுஸ் தெருவில் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 60 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பங்கஜம் ஹவுஸ் தெருவை சேர்ந்தவர் ராஜாராம், 75. மஞ்சள் வியாபாரியான இவர், வீட்டை பூட்டி விட்டு துாத்துக்குடியில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.
திரும்ப வந்து பார்த்த போது வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 60 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. ராஜாராம் கொடுத்த புகாரில் தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் இந்த திருட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2