மதுரை- தேனி அகல ரயில் இயக்க வலியுறுத்தி போராட்டம்
மதுரையில் இருந்து தேனி வரை, அகல ரயிலை இயக்க வலியறுத்தி, தேனியில் போராட்டம் நடந்தது.;
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், மதுரை- தேனி வரை அகல ரயிலை இயக்க வலியுறுத்தி ரயில் தண்டவாளத்தில் மறியல் செய்து போராட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் தமிழ் பெருமாள் தலைமையில், தேனியில் நடந்த இந்த போராட்டத்தில் ஐம்பதிற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். கோரிக்கையினை வலியுறுத்தி பெரியகுளம் ரோட்டருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நின்று கோஷமிட்ட போராட்ட குழுவினர் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று கலைந்து சென்றனர்.