ஆபாசமாக பேசிய உளவுத்துறை காவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு
ஆபாசமாக பேசிய உளவுத்துறை போலீஸ்காரர் மீது கூடலுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;
கூடலுார், குமுளி பகுதிக்கான தேனி மாவட்ட உளவுப்பிரிவு போலீசாக பணியாற்றுபவர் ராஜன். இவருக்கும், கூடலுாரை சேர்ந்த ஒருவருக்கும் தகராறு இருந்துள்ளது. இதனால் டென்சன் ஆன ராஜன், அந்த நபரை மொபைலில் அழைத்து மிக, மிக அறுவெறுக்கத்தக்க, கொடூர ஆபாசங்கள் நிறைந்த வார்த்தைகளால் திட்டி அவமதித்துள்ளார். அவரிடம் சண்டையும் போட்டுள்ளார்.
அந்த நபர் இந்த ஆடியோவை அப்படியே சமூக வலைதளங்களில் வெளியிட்டதோடு, போலீஸ் எஸ்.பி.,யிடமும் புகார் செய்து விட்டார். இந்த ஆடியோவை கேட்ட பொதுமக்கள் மிகவும் கோபமடைந்தனர். ஒரு போலீஸ்காரர் அதுவும் பொறுப்பு மிக்க உளவுத்துறையில் பணிபுரிபவர் இப்படி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதை ஏற்க முடியாது. போலீசாக இருப்பதால் தனது சொந்த பிரச்னைகளுக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும் தவறு என கருத்து தெரிவித்ததனர்.
இதனைத் தொடர்ந்து கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரர் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என இன்ஸ்பெக்டர் லாவண்யா தெரிவித்தார்.